சாதி ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம் ஆணையம் அமைப்பை வரவேற்றார் சாமுவேல்ராஜ்
கடலூர், அக்.17 - சாதி ஆணவ படுகொலைக்கு எதிரான தனிச்சட்டம் இயற்ற நீதிபதி பாட்ஷா தலை மையில் ஆணையம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் அறி விப்பை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்றுள்ளது. விரைவில் சட்டம் இயற்ற வேண்டும் என்று மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநில பொதுச் செயலாளர் சாமு வேல்ராஜ் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசினார். சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வந்தன. ஆனால் மாநில அரசு ஏற்கெனவே இருக்கும் கிரிமினல் சட்டம் போதுமானது என்று கருத்து தெரிவித்திருந்தது. தமிழ கத்தில் தொடர்ச்சியாக சாதிய ஆணவ படுகொலைகள் நடைபெற்று வருகின்றன. தலித் மக்களுக்கும் தலித் அல்லாத வர்களுக்கும் இடையில் மட்டுமல்லாமல், பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள்ளேயே திருமணம் நடைபெற்றாலும் கொடூரமான படுகொலைகள் நடக்கின்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின், சாதி ஆணவ படு கொலைக்கு எதிரான தனிச்சட்டம் இயற்ற சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாட்ஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று அறி வித்துள்ளார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மார்க்சிஸ்ட்கட்சியும் இதற்காக மாநாடுகள், போராட்டங்கள், சேலத்திலிருந்து சென்னை வரை 350 கிலோமீட்டர் நடை பயணம், நீதிமன்ற வழக்குகள் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளன. எனவே முதலமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். அதே நேரத்தில் ஆணையத்திற்கு உடனடி யாக வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். ஆணையம் விரைவில் பரிந்துரையை வழங்க வேண்டும். அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டம் அறி முகப்படுத்தப்பட்டு தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்ற வேண்டும். கழுதூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். ரூ.5 லட்சம் நிவாரணத்திற்கு பதில் குறைந்த பட்சம் 10 லட்சம் வழங்க வேண்டும். பட்டாம்பாக்கம் பெண்கள் பள்ளியில் மாணவி தற்கொலை முயற்சி யில் ஈடுபட்டுள்ளார். அந்த பள்ளியில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் பள்ளி நிர்வாகமும் கல்வித்துறையும் ஆய்வு மேற்கொண்டு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பேட்டியின் போது சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர் ஜெ.ராஜேஷ் கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பழ. வாஞ்சிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
