tamilnadu

img

கடலில் மாயமான சிறுவனை கண்டுபிடிக்க கோரிக்கை

கடலில் மாயமான சிறுவனை கண்டுபிடிக்க கோரிக்கை

கடலூர், அக்.9 – மீன் பிடிக்க செல்லும் பொழுது கடலில் மாயமான 16 வயது சிறுவனை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கடலூர் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம், தியாகவல்லி ஊராட்சிக்கு உட்பட்ட சித்திரப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் மகன் முகுந்தன்.  16 வயதான இவர், புதன்கிழமை(அக்.8) கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.  திரும்பி வரும்பொழுது தவறி விழுந்து மாயமானார். இதுவரையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கடலில் மாயமான சிறுவனை கண்டுபிடித்து உதவிடும்படி சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.ஏழுமலை மாவட்ட ஆட்சியருக்கு மனு