பேருந்து நிலையம்அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுக! வாலிபர் சங்க பேரவை வலியுறுத்தல்
சென்னை, ஆக. 3 - மந்தைவெளி பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் மயிலை பகுதி பேரவை சனிக்கிழமையன்று (ஆக.2) நடைபெற்றது. மாநாட்டில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும், வட்டத்திற்கு ஒரு விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பகுதி தலைவர் ஜெ.தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சங்க கொடியை முன்னாள் தலைவர் எம்.குமார் கொடியேற்றினார். வள்ளீஸ்வரன் தோட்டம் கிளைச் செயலாளர் இ.திலிப் ராஜ் வரவேற்றார். வேலையறிக்கையை பகுதிச் செயலாளர் எஸ்.மகேஷூம், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ஆர்.எஸ். நாகராஜூம் சமர்ப்பித்தனர். சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, துணைச் செயலாளர் கே.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் ஆர்.நிவேதா உள்ளிட்ட தோழமைச் சங்கத் தலைவர்கள் பேசினர். பகுதிக்குழு உறுப்பினர் பிரித்குமார் நன்றி கூறினார். 9 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கி ணைப்பாளராக மகேஷ், துணை ஒருங்கிணைப்பாளராக நிவேதா, தினேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.