காவல் நிலையத்திலேயே காதலர்களை தாக்கிய உறவினர்கள்
கடலூர், ஜூலை 30- விருத்தாசலம் காவல் நிலையத்தில் காதல் ஜோடிகளை காவலர்கள் கண் முன்னே உறவினர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பெரிய கண்டியாங்குப்பம் கிராமத்தைச் சார்ந்த சதீஷ் (வயது 29) என்பவரும், சித்தேரி குப்பம் கிராமத்தைச் சார்ந்த சந்தியா (19) இரு வரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை ( ஜூலை 28) சந்தியா பெற்றோர்கள் விருத்தாச்சலம் காவல் நிலை யத்தில் தனது பெண் காணவில்லை என புகார் அளித்துள்ளார்கள். இது தொடர்பாக போலீ சார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலை யில் புதன்கிழமை (ஜூலை 30) சந்தியா - சதீஷ் ஆகியோர் இருவரும் திருமணம் செய்து கொண்டு விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் வந்தனர். அப்பொழுது அங்கு இருந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை கடுமையாக தாக்கினர்கள். உடனே அங்கு வந்த காவல் துறையினர் அந்த பெண்ணை மீட்டு அழைத்துச் சென்றனர். காவல் நிலைய வளாகத்துக்குளேயே திருமணம் செய்து கொண்டு வெளியில் வந்த காதலர்கள பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாக்கினர். இதனால் இந்த பகுதியே போர்க்களம்போல் காட்சியளித்தது. ஆனால், போலீசார் வேடிக்கை பார்த்தது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.