உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை! ராணிப்பேட்டை மாவட்ட தூய்மை பணியாளர்கள் துயரம்
ராணிப்பேட்டை மாவட்ட தூய்மை பணியாளர்கள் துயரம்
ராணிப்பேட்டை, ஜூலை 31 - ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு, மேல்விஷாரம் ஆகிய 6 நக ராட்சிகள் உள்ளது. இதில் தமிழ கத்தின் முதல் நகராட்சி வாலாஜா நகராட்சியும் அடங்கும். நகராட்சிகளில் பணி யில் சேர்ந்த ஒப்பந்தத் தொழி லாளர்களுக்கு அடையாள அட்டை, சீருடை, ஊழியர் மாநில காப்பீடு மற்றும் வருங்கால வைப்பு நிதி போன்ற அடிப்படை சலுகைகள் கூட வழங்கப்படு வதில்லை. நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழி லாளர்களின் மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்த ஊழியர் மாநில காப்பீடு மற்றும் வருங்கால வைப்பு நிதி போன்றவற்றை நகராட்சி நிர்வாகங்கள் அந்த தொகையை முறையாக செலுத்தவில்லை. குறைந்தபட்ச ஊதியம் இல்லை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பை களை தரம் பிரிப்பதற்கான பைகள் மற்றும் உபகரணங்கள் செயல்படாமல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அளிப்பதால் பணி பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் இதுவரை முறையாக தேதியில் வழங்க நடவடிக்கை இல்லை. தூய்மை பணியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் தரக்குறைவாக அதி காரிகள் நடந்துகொள்கின்றனர். தொழிலாளர்க ளுக்கு பெயரளவில் காலம் கடந்து நல வாரிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதனால் அரசின் சலுகைகள் இருந்தும் பெறமுடியாத அவலத்திற்கு தள்ளப்படு கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி குறைந்தபட்ச ஊதியம் கூட முறையாக வழங்கப்படுவதில்லை. மன உளைச்சலுக்கு தள்ளப்படும் தொழிலாளர்கள் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கியில் சொந்த பயன்பாட்டிற்காக திருமணம், கல்வி போன்ற கடன்கள் பெற்றுள்ளதற்கு மாதம் தோறும் ஊதியத்தில் இருந்து தவணை முறையில் தொகையை நகராட்சி நிர்வாகம் பிடித்தம் செய்துள்ளது. அந்தத் தொகையை கூட்டுறவு வங்கிக்கு முறையாக செலுத்தாமல் சில தொழிலாளர்களுடையது நிலுவையில் உள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு நேரடி யாக கூட்டுறவு வங்கியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு மன உளைச்சல் ஏற்படும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் தொழி லாளர்கள் பணி ஓய்விற்கு பிறகு பணப்பயன் கள் வழங்குவதில் காலம் கடத்தி அலைக் கழிக்கும் போக்கால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாவட்டத்தில் பொது கழிப்பறைகள் சுத்தம் செய்வதற்கு ஆசிட் உள்ளிட்ட உப கரணங்கள் வழங்கப்படுவதில்லை. பணி யாட்களை சரியாக முறைப்படுத்துவது இல்லை. இதனால் பொது கழிப்பறைகள் அசுத்தமாக காணப்படுகிறது. மேலும் புதிதாக கட்டப்படும் பொது கழிப்பறைகள் நிலை என்ன..? 10 மற்றும் 20 ஆண்டுகள் பணி முடித்த தொழிலாளர்களுக்கு பணிவரன் செய்யப்பட வேண்டும். ஆனால் இதுவரை நகராட்சி நிர்வாகம் செய்யவில்லை என மன வேதனையில் உள்ளனர் என்று ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் பி. கோதண்டபாணி கூறினார். இந்த கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளதாக அவர் கூறினார். சங்கத்தின் சார்பில் வழங்கிய மனுவும் நிலுவையில் உள்ளது. மேலும் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரி சோதனை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக ராணிப்பேட்டை நகராட்சி ஆணையரிடம் கடந்த 3 மாதங்களில் இரண்டு முறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அங்கீ கரிக்கப்பட்ட தொழிற்சங்கத்திற்கும் மதிப்ப ளிக்காமல் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசாமல் அதிகார தோரணையில் அவர் செயல்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 26) தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி டாக்டர். வெ. ஆறுச்சாமி தலைமையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குறைகேட்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா மற்றும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முன்பு வாரிய தலைவரிடம் பேசக்கூடாது என அதிகாரிகள் எச்சரித்து அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. தூய்மை செய்யும் பணியாளர்களை கண்ணியக்குறைவாக நடத்தும் நகராட்சி நிர்வாகத்தின் போக்கு கண்டிக்கத்தக்கது என ஊரக வளர்ச்சி உள்ளாட்சி பி. கோதண்டபாணி தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சீருடை, பாதுகாப்பு உப கரணங்கள், வாரத்தில் ஒரு நாள் விடுமுறை உள்ளிட்ட அடிப்படை சலுகைகள் ஏற்படுத்த வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவதற்கு மாவட்டம் முழுவதும் தீர்வு காணப்பட வேண்டும். குப்பைகளை உரமாக விற்பனை செய்யக்கூடிய பணம் பரிவர்த்தனையில் ஆட்சியர் தலை யிட்டு ஒழுங்குமுறை படுத்த வேண்டும். அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும். தூய்மை பணியாளர்கள் நகராட்சி குடியிருப்புகள் புனரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.