ஆய்வு பணிக்கு வராத ரயில்வே அதிகாரிகள் எம்பி தலைமையில் ரயில் மறியல்
கடலூர், அக். 11- திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நடந்த ஆய்வு பணியில் ரயில்வே அதிகாரி கள் கலந்துகொள்ளாததை கண்டித்து, விஷ்ணு பிரசாத் எம்பி தலைமையில் அரசி யல் கட்சியினர் ரயில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலை யத்தில் ஆய்வுக்காக மக்கவிஷ்ணு பிரசாத் சனிக்கிழமை (அக்.11) வந்தார். முன்கூட்டியே முறையாக தகவல் அளிக்கப்பட்டு ஆய்வுக்கு வரும் பொழுதும் ரயில்வே அதிகாரிகள் வரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மக்களவை உறுப்பினரும் அரசி யல் கட்சி தலைவர்களும், அதிகாரிக ளுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரி வித்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் வரவில்லை. இதையடுத்து, தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மக்களவை உறுப்பினர் விஷ்ணு பிரசாத், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநகர செய லாளர் ஆர்.அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.ஆளவந்தார், எஸ்.கே.பக்கிறான், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் திலகர் மற்றும் ரவிக்குமார், திமுக முன்னாள் எம்எல்ஏ புகழேந்தி, விசிக மாநில அமைப்பு செயலாளர் திரு மார்பன், மாநகர செயலாளர் செந்தில், பொதுநல அமைப்புகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.என்.கே.ரவி, கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் நிர்வாகிகள், ரயில் பயணி கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி அழைத்து வந்தனர். தொடர்ந்து கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதி யின்மை, கூடுதல் டிக்கெட் கவுண்டர் அமைக்க வேண்டும், ரயில் நிலையத்திற்கு முறையான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி, மேற்கூரை சரி செய்ய வேண்டும், தற்போது நடைபெற்ற பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
