புதுச்சேரி சாலையோர வியாபாரிகள் சங்க 30வது ஆண்டு விழா சிறப்பிதழ்
காவல்துறையை கண்டு ஓடி ஒளிந்த நிலை இன்று இல்லை
சாலையோர வியாபாரிகளுக்கு ஒளிவிளக்காக திகழும் சிஐடியு!
சிதறிக்கிடந்த உதிரி தொழி லாளர்களை ஒன்றிணைத்து அவர்களின் உரிமைக்காக போராடி 30 ஆண்டுகளாக பாதுகாவலனாக திகழும் புதுச்சேரி சிஐடியு அமைப்பின் முக்கிய அங்கமாக விளங்கும் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு மற்றும் 5வது மாநில மாநாடு வெள்ளியன்று (ஜூலை 4) நடைபெறுகிறது. 1995 ஆம் ஆண்டு புதுச்சேரி நகரின் மையப்பகுதியான நேரு வீதியில் காவல்துறையில் லத்திகளுக்கு பயந்து தரையில் கோணிப்பை விரித்து வியாபாரம் செய்யவேண்டிய காலம் ஒன்று இருந்தது. வெகு தூரத்தில் காக்கிச் சட்டையை கண்டால் சாக்கு பையுடன் சுருட்டிக் கொண்டு ஓடி ஒளிந்த காலத்தில் நடைபாதையில் சிதறி கிடந்த உதிரி தொழிலாளர்களை ஒருங்கிணைத்தது செங்கொடி அவர்களை ஒருங்கிணைத்ததில் அப்போதைய தா.முருகன், ஆர்.ராஜாங்கம், பெருமாள் ஆகிய தலை வர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. நம்பிக்கையை விதைத்த செங்கொடி இயக்கம் உயர்நீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி அவர்கள் வியாபாரம் செய்வதற் கான உரிமையை முதன் முத லில் புதுச்சேரியில் பெற்றுக் கொடுத்தது செங்கொடி இயக்கம். அப்போது இருந்த 25 நடைபாதை தொழிலாளர்களை கொண்டு உருவாக்கப்பட்டதுதான் சாலை யோர வியாபாரிகள் சங்கம். சிஐடியு இணைக்கப்பட்ட இந்த சங்கம் காவல்துறையினர் கண்டு நடுங்கிய கைகளையும் ஓடிய கால்களையும் நிறுத்தி , தலை நிமிர்ந்து முஷ்டி உயர்த்தி தங்களின் வாழ்வாதாரத்திற்காக அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தது. இன்று சிஐடியு புதுச்சேரி மாநில சாலையோர வியாபாரிகள் சங்கம் 30 ஆண்டுகளில் வளர்ந்து ஆலமர விருட்சமாய் கம்பீரமாய் நிற்கின்றது. முக்கியமான இரண்டு சட்டங்கள் 2004 ஆம் ஆண்டு நாடாளு மன்றத்தில் இடதுசாரி கட்சிகள் வலுவாக இருந்த காரணத்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளிக்கப்பட்ட நிர்பந்தம் காரணமாக சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதார பாதுகாப்பு வரைவு சட்டத்தை கொண்டுவர முடிந்தது. அத்தோடு நிற்காமல் 2014 ஆம் ஆண்டு இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2014 சட்டம் நிறைவேற்றப்பட்டது. நாடு முழுவதும் அப்போது இருந்த 4 கோடிக்கும் மேற்பட்ட சாலையோர தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க செங்கொடி இயக்கம் நடத்திய போராட்டத்தின் விளைவாக இந்த சட்டத்தை ஆட்சியாளர்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கிரண்பேடியின் அராஜகம் புதுச்சேரியில் 2018 ஆம் ஆண்டு அப்போதிருந்த துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் நகரத்தை அழகுப்படுத்துவதாக கூறி சாலையோர வியாபாரிகளை ஒட்டு மொத்தமாக துடைத்தெறிய நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறைக்கு ஆணை யிட்டார். ஜேசிபி , புல்டோசர்களுடன் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் புதுச்சேரியின் நகர சாலைகளில் படை யெடுத்து செஞ்சி சாலை, ஆம்பூர் சாலையோரம் அனைத்து கடை களையும் அடித்து நொறுக்கினர் அப்போது சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத்திற்கு அந்தப் பகுதியில் சங்கம் கிடையாது. அங்கே இருந்த சாலையோர வியா பாரிகள் அனைவரும் அப்போது இருந்த சட்டமன்ற உறுப்பினரின் ஆதர வாளர்களாகவும் பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களாகவும் இருந்தனர். இவர்கள் சிஐடியு சங்கத்தில் இல்லை என்பதற்காக பாதிக்கப்பட்ட வியாபாரிகளை கண்டும் காணாமல் இருக்கவில்லை. உடனே சி ஐ டி யு களத்தில் இறங்கி யது. அரசின் அராஜகத்தை எதிர்த்து சாலையோர வியாபாரிகளை ஒன்று திரட்டியது. காவல்துறையை கண்டால் ஏதுமறியா வியாபாரிகள் சிதறுத் தேங்காய் போல் ஓடி ஒளிந்து விடுவார்கள் என்று ஆட்சியாளர்கள் நினைத்தனர். காவல்துறையை ஏவிவிட்டு தடியடி நடத்தியபோதும் அதற்கும் அஞ்சாமல் நின்ற அவர்களின் ஒற்றுமையை கண்டு அரசு நிர்வாகம் பின்வாங்கியது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அவர்களின் நம்பி இருந்த சட்டமன்ற உறுப்பினரும் அந்த பகுதிக்கு வரவில்லை. மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களும் அங்கு வரவில்லை. சிஐடியு செங்கொடி மட்டுமே வியாபாரிகளுக்காக களத்தில் நின்றது. இதன்பின்னர் சுதாரித்துக் கொண்ட காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் தங்களது நடவடிக்கை களை நிறுத்திவிட்டு மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது இருந்த மாவட்ட ஆட்சியர் அருண் மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் சுதாகர் ஆகியோருடன் சி ஐ டி யு சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்துவதற்கு முதற்கட்ட நடவடிக்கைகளை தொடங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக அமைந்தது. ஐதராபாத் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த கணக்கெடுப்பு குழுவிற்கு உதவி செய்வதற்காக தற்காலிக விற்பனைக்குழு (வென்டிங் கமிட்டி) மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டது. அதில் முதன்முதலாக நமது சிஐடியு வை சார்ந்த மூன்று தலைவர்கள் மட்டுமே இடம்பெற்றனர். அதன் பிறகே மற்ற தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும் இணைக்கப்பட்டனர். கணக்கெடுப்பு குழுவினர் புதுச்சேரி முழுவதும் செல்லும் போது நமது சிஐடியு சாலையோர சங்கத் தோழர்கள், கணக்கெடுப்பு பணிகளுக்கு உதவி செய்தனர். இதன் விளைவாக புதுச்சேரி நகரின் அனைத்து சாலைகளிலும் சிஐடி யு சங்கத்தின் கீழ் கிளைகள் அமைக்கப்பட்டது. அதன் பிறகு ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் நடைபெற்ற அத்துணை நடவடிக்கைகளையும், சாலையோர தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களையும் நமது சாலையோர வியாபாரிகள் சங்கம் முறியடித்தது. அதன் விளை வாக 2022 ஆம் ஆண்டு சட்ட வழி காட்டுதல்படி உழவர்கரை நகராட்சி யில் நடைபெற்ற வெண்டிங் கமிட்டி தேர்தலில் 12 இடங்களில் தனித்து நின்ற சிஐடியு 10 இடங்களை கைப்பற்றி கம்பீரமாய் எழுந்து நின்றது. இப்படி ஒரு சிறிய அளவி லான தொழிலாளர்களை கொண்டு உருவாக்கப்பட்ட நடைபாதை தொழிலாளர்களுக்கான சங்கம் இடைவிடாத தொடர் களப்போராட்டம் காரணமாக இன்று 30 ஆம் ஆண்டு விழாவை காண்கிறது.