tamilnadu

img

தந்தை பெரியார் பிறந்தநாள் புதுச்சேரி முதல்வர் மரியாதை

தந்தை பெரியார் பிறந்தநாள்  புதுச்சேரி முதல்வர் மரியாதை

புதுச்சேரி,செப்.17- தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாளை  யொட்டி புதுச்சேரி பிள்ளை தோட்டத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். இதில் அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஆறுமுகம் (எ) ஏ.கே.டி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி அஞ்சலி இதேபோல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில், தந்தை பெரியார் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், பெருமாள், கொளஞ்சியப்பன், சீனு வாசன், கலியமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.