பொதுவேலை நிறுத்தம்: புதுச்சேரி அரசு ஊழியர்கள் பங்கேற்க முடிவு
புதுச்சேரி, ஜூலை 7- நாடு முழுவதும் ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும் பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனம் முழுமையாக பங்கேற்கும் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன செயல் தலை வர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொது செய லாளர் முனுசாமி ஆகியோர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த திட்டம் ஆகியவற்றை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூ தியத்தை அமல்படுத்த வேண்டும். கருணை அடிப்படையிலான வாரிசுதாரர் பணி நியமனத்திற்கு 5 விழுக்காடு உச்சவரம்பை நீக்கி அனைத்து வாரிசுதாரர்களுக்கும் நிரந்தர பணியை வழங்க வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அரசு துறை மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் ஒப்பந்தம் மற்றும் அவுட்சோர்சிங் அடிப்படையில் பணி நிய மனம் செய்வதை கைவிட வேண்டும் என்றும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், மின்சார திருத்த சட்டம் 2022 ஐ திரும்பப் பெற வேண்டும், ஒன்றிய பாஜக அரசு பின்பற்றி வரும் ஊழியர்களுக்கு எதிரான பொருளாதார கொள்கைகள் மற்றும் கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு ஆதரவாக எடுக்கப்படும் கொள்கை முடிவுகளை எதிர்த்து நடை பெறும் ஜூலை 9 அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர் சங்கங்களின் இணைப்பு சங்கங்களைச் சேர்ந்த பங்கேற்பார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த சந்திப்பில் சம்மேளன கௌரவத் தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், செய்தித் தொடர்பாளர் நமச்சிவாயம் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுச்சேரி அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை தொகுப்பு ஊதியம் பெறும் ஆசிரியர்கள், ஊழியர்களை கொண்டு நிரப்ப வலியுறுத்தி தனியார் பள்ளி ஆசிரியர் சம்மேளனம் சார்பில் எல்லைபிள்ளைச் சாவடியில் உள்ள கல்வித்துறை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்மேளன நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கிறிஸ்டோபர்,வின்சென்ட் ராஜ் உட்பட திரளான ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.