போச்சம்பள்ளி அருகே இருளில் தவிக்கும் பொதுமக்கள்
கிருஷ்ணகிரி, ஆக. 29- போச்சம்பள்ளி தாலுகா வெப்பாலம்பட்டி ஊராட்சி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் உள்ள மின்விளக்கு ஒரு மாதமாகப் பழுதாகி உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி உள்ள இச்சாலையில் பெரும்பாலான மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இந்த நிறுத்தத்தில் பேருந்துக்காக, குறிப்பாக பெண்கள், குழந்தைகள் இருட்டில் காத்திருக்கும் நிலை கடந்த சில மாதங்களாக நீடித்து வருகிறது. இருளில் சாலையின் வளைவுப் பகுதியில் வாகனங்கள் திரும்பும்போது அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மின்விளக்கு பழைய ஹோல்டரில் மின் கம்பியில் தொங்கவிடப்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் மின் விளக்கு தொடர்ந்து பழுதாகி வருவதாகவும் கூறுகின்றனர்.எனவே மின்கம்பம், ஹோல்டர், தெருவிளக்குகளை சீர்படுத்திட வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.