சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்
சென்னை, செப். 23- திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட தந்தை பெரியார் நகர் பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மழைக்காலத்தில் சேறும் சகதி யாக மாறிவிடுவதால் நடந்து செல்லவும், இரண்டு சக்கர வாகனத்தில் கூட செல்ல முடியவில்லை. 40 ஆண்டு காலமாக சாலை வசதியே இல்லாமல் இருப்பதால் பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே உடனடியாக சாலையை சீரமைக்க அரசும், மாநகராட்சியும் முன்வர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.