tamilnadu

img

புதுச்சேரியில் டிஜிட்டல் சர்வே நில அளவை பணிகளுக்கான மக்கள் கருத்தறிவு கூட்டம்

புதுச்சேரியில் டிஜிட்டல் சர்வே நில அளவை  பணிகளுக்கான மக்கள் கருத்தறிவு கூட்டம்

புதுச்சேரி, ஆக. 23- புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட முருங்கப்பாக்கம் வருவாய் கிராமத்தில் புதிய டிஜிட்டல் சர்வே நில அளவை பணிகள் செய்வ தற்கான மக்கள் கருத்த றிவு கூட்டம் சனிக்கிழமை (ஆக.23) முருங்கப்பாக்க த்தில் நடை பெற்றது. நில அளவை பதிவேடுகள் துறை இயக்கு னர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் தட்சிணா மூர்த்தி, சம்பத் மற்றும் முன்னாள் நகராட்சி ஆணையர் சந்திரசேகரன், நில அளவை பதிவேடுகள் துறையின் தாசில்தார்கள் உள்ளிட்ட துறையின் அதி காரிகள் கலந்து கொண்டனர். இந்திய அரசின் நில வளங்கள் துறையின் பங்க ளிப்புடன் விரைவில் நவீன கருவிகளைக் கொண்டு தங்கள் குடியிருக்கும் வீட்டு மனை மற்றும் நிலங்க ளின் அளவுகளை துல்லிய மாக அளவெடுத்து வரை படங்களை கணினி மூலம் பதிவேற்றப்படும் என தெரி விக்கப்பட்டது. தங்கள் வீட்டு ஆவணங்களின் அடிப்  படையில் பட்டா பெயர் மாற்றம் செய்து புதிய எண் வழங்கப்படும். 40 ஆண்டு களுக்கு மேலாக நடை பெறாமல் உள்ள பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் தற்போது இத்திட்டத்தின் மூலம் மக்க ளுக்கு மாற்றி தரப்படும் என அதிகாரிகள் கூறினர். எளிய முறையில் நவீன கருவிகள் மூலம் எந்தவித முறைகேடுகளுக்கும் இடம் வழங்காமல் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. முதலில் முருங்கப்பாக்க த்தில், பின்னர் புதுச்சேரி மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்படும். எனவே முருங்கப்பாக்கம் வருவாய் கிராமத்தில் உள்ள அனைத்து நிலம் உரிமை யாளர்கள், மனை வைத்தி ருப்பவர்கள் தங்களது விவரங்களை இதற்கான அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என்று இயக்கு னர் செந்தில்குமார் கேட்டுக் கொண்டார்.