சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கல்
புதுக்கோட்டை, அக். 11-  புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில், புதுக்கோட்டை நகரில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வெள்ளிக்கிழமை நிழற்குடைகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நகர காவல் நிலையம், எல்.ஐ.சி அலுவலகம் அருகே மற்றும் சாந்தநாதர் கோவில் அருகே சாலை ஓரங்களில் பூ மற்றும் பழ வியாபாரம் செய்து வரும் தொழிலாளர்களுக்கு 20 நிழற்குடைகள் வழங்கப்பட்டன. நிகழ்விற்கு, புதுக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். இளங்கோ தலைமை வகித்தார். பி.எஸ்.கே மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் பி.எஸ். கருப்பையா, திட்ட தலைவர் சு. ஆரோக்கியசாமி, செயலாளர் சாகுல் ஹமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
                                    