மலைக்குறவன் மக்களுக்கு இனச்சான்று வழங்கிடுக
சேலம், ஆக.10- மலைக்குறவன் இன மக்களுக்கு தடையின்றி இனச்சான்று வழங்க வேண்டும், என சங்கத்தின் சேலம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மலைக்குறவன் பழங்குடியின மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சேலம் மாவட்ட மாநாடு, ஆத்தூரில் சங்கத்தின் நிர்வாகி கணேசன் தலை மையில் சனியன்று நடைபெற்றது. முன்னதாக, பழங்குடியினப் போராளி பிர்ஷா முண்டா உருவப் படத்துடன் பேரணி, பாரம்பரிய முறைப்படி பழங்குடியின மாணவர்க ளின் சிலம்பாட்ட நிகழ்ச்சியுடன் மாநாடு துவங்கியது. அஞ்சலி தீர் மானத்தை வெங்கடேசன் வாசித்தார். செயலாளர் தனபால், பொருளாளர் சரவணன் ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். இம்மாநாட் டில், மலைக்குறவன் இன மக்க ளுக்கு தடையின்றி இனச்சான்று வழங்க வேண்டும். பழங்குடியினர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட 123 இலவச வீட்டுமனையில் பயனாளிக ளுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும். வன உரிமைச் சட்டம் 2006-இன்படி, சேலம் மாவட்டத்தில் வாழும் பழங் குடி மலைக்குறவன் இன மக்கள், அருகிலுள்ள மலை, வன பகுதியில் தலைச்சுமையாக மூங்கில் வெட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். மலைக்குறவன் இன மக்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி, தாட்கோ மூலம் கடன் வசதி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. முன்னதாக, 10 ஆம் வகுப் பில் அதிக மதிப்பெண் பெற்ற மாண வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட் டது. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக பி.மனோக ரன், செயலாளராக ஆர்.தனபால், பொருளாளராக கே.ஏ.சரவணன் உட் பட 33 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைத்தலைவர் ஏ.வி.சண்முகம் நிறைவுரையாற்றினார்.