அனைத்து கிராமங்களிலும் சுகாதாரமான குடிநீர் வழங்குக
விழுப்புரம், ஆக.9- விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் விக்கிரவாண்டி ஒன்றிய மாநாட்டில் அனைத்து கிராமங்களிலும் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாதர் சங்கத்தின் ஒன்றிய பேரவை கூட்டத்துக்கு சங்கத்தின் வட்டப் பொருளாளர் எஸ். சித்ரா தலைமை தாங்கினார். பேரவை கூட்டத்தை மாவட்டச் செயலாளர் இலக்கிய பாரதி கலந்து கொண்டு தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார். பேரவையில் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எஸ்.கீதா கலந்து கொண்டு நிறைவுரையாற்றினார். 11 பேர் கொண்ட புதிய ஒன்றிய குழு தலைவராக எஸ்.அமுதா, செய லாளராக பி.உமா, பொருளாளராக பி.ஜெயா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைத்து கிராமங்களிலும் 100 நாள் வேலை திட்டம் முழுமையாக கொடுக்கப்பட வில்லை, மாறாக 5 நாட்கள், 10 நாட்கள், 20 நாட்கள் என்ற அடிப்படையில் 100 நாள் வழங்கப்படுகிறது. 100 நாள் வேலையை 200 நாள் வேலையாக வழங்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.