அரியலூரில் இன்று பொதுப் பாதை ஆக்கிரமிப்பு அகற்றும் போராட்டம்
அரியலூர், செப்.2 - அரியலூரில் வாரச்சந்தை பின்புறம் 70 குடும்பங்களின் பொதுப் பாதை ஆக்கிர மிப்புகளை அகற்றி பொதுப் பாதையை மீட்கும் போராட்டம் புதன்கிழமை (செப்.3) நடைபெறுகிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்கிறார். அரியலூர் வாரச்சந்தைக்கு பின்புறம், செட்டி ஏரிக்கு தென்புறம் உள்ள சுமார் 70 குடும்பங்களுக்குச் சொந்தமான 603 1C, 603 1D என்ற சர்வே எண்ணில் உள்ள பொதுப் பாதை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் மாவட்டக் குழுவின் சார்பாக தொடர்ந்து அதி காரிகளை சந்தித்து புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது. மேலும் நேரடியாக மாவட்ட ஆட்சியரி டமும், கோட்டாட்சியரிடமும், மாவட்ட காவல் துறையிடமும் புகார் செய்தும், கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தியும் அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழுவின் சார்பில் புதன்கிழமை, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுப் பாதையை மீட்கும் போராட்டம் நடைபெறுகிறது. அதையொட்டி, பொதுப் பாதை ஆக்கிர மிப்பு அகற்றும் போராட்டத்தில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், பொதுப் பாதை இல்லாமல் பாதிக்கப்பட்ட பயனாளிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கட்சியினர் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.