பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்செவ்வாயன்று (செப். 23) நடைபெற்றது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தலைமை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வேலூர் திட்டக்கிளை தலைவர் வி.காமராஜ் தலைமையில் நடைபெற்ற மறியலில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் துவக்கி வைத்து உரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் எம்.கோவிந்தராஜ் திட்டக்கிளை செயலாளர் எம்.சின்னதுரை பொருளாளர் ஆர்.முரளி கிருஷ்ணன் இணை செயலாளர் டி.ஜெகன் உள்ளிட்ட சுமார் 100 பேர் கைதாகினர்.
