அம்பத்தூரில் கட்சி கொடி கம்பங்களை அகற்றுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
அம்பத்தூர், செப். 21- கட்சி கொடி கம்பங்களை அகற்றுவதைக் கண்டித்து அம்பத்தூரில் அனைத்துக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கட்சி கொடி கம்பங்களை அகற்று வதற்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடைக்கால தடை பெற்றுள்ளது. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் ஆணை எனக் கூறி சென்னை மாநகராட்சி சென்னையின் பல்வேறு இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அம்பத்தூரில் கொடி கம்பங்களை அகற்றும் பணியில் மாநக ராட்சி மண்டலம் 7இல் அதிகாரிகள் ஈடுபட்டுள் ளனர். உச்சநீதிமன்றத்தின் ஆணையை காண்பித்த பிறகும் அதிகாரிகள் கொடி கம்பங்களை அகற்றும் பணிகளை நிறுத்த வில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ஆகிய கட்சி கள் சார்பில் சனிக்கிழமை (செப். 20) மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிபிஎம் பகுதிச் செயலாளர் ஆர்.கோபி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எல்.பி.சரவணத்தமிழன், சு.பால்சாமி (சிபிஎம்), ஆர்.விஜயகுமார், பி.மாரியப்பன் (சிபிஐ), தாமோதரன் (மதிமுக), இப்ராகிம் (விசிக) ஆகியோர் பேசினர்.
