tamilnadu

img

சாதி ஆணவக் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சாதி ஆணவக் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் வாலிபர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் வைரமுத்து சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனி சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட கோரியும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் ரவிதாசன் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.சிவகுமார், மாவட்டச் செயலாளர் ப.செல்வன், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், கே.வாசுகி, எஸ்.ராமதாஸ், மாவட்ட குழு உறுப்பினர்கள் சிவாஜி ச.குமரன், தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல், உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் எம்.தீபன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில இணைச் செயலாளர் என்.கே.பழனி,மாவட்டச் செயலாளர் மு.சிவக்குமார்,மாவட்டத் துணைத் தலைவர் கே.சக்கரவர்த்தி,மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.தங்கதுரை,டி.ராஜீவ் காந்தி,ஏ.ரிச்சர்ட்பிரபு,மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஜே.டார்வின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.