tamilnadu

img

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணம்

சென்னை:
தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த, ரூ.4,500 கட்டணத்துக்கும் அதிகமாக ரூ. 6,000 முதல் ரூ. 8,000 வரை வசூலிக்கப்படு வதாகவும், சிகிச்சைக்கு லட்சக்கணக் கில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்கக் கோரிய மனு சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்கு உள்ளதால் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும் தனியார் மருத்துவமனையில் 50 விழுக்காடு படுக்கைகளும் ஒதுக்க கோரிய ஜவாஹிருல்லாவின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு ரூ.4500 வரை வசூலிக்க ஏற்கனவே ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தி இருந்த நிலையில் தற்போது ரூ.3000 கட்டணம் நிர்ணயிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

;