சண்டிகர்:
வெளிமாநிலங்களில் தங்கியிருக்கும் தொழிலாளர் கள் சொந்த மாநிலம் திரும்புவதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும், அதற்கான கட்டணத் தொகையில் 85 சதவிகிதத்தை ரயில்வே ஏற்கும் என்றும் மத்திய நரேந்திர மோடி அரசு அறிவித்தது. ஆனால், அதற்குரிய முறையான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று பல்வேறு மாநில அரசுகள் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகின்றன. இந்நிலையில், ரயில் கட்டண விவகாரத்தில், பஞ்சாப்மாநில சிறப்பு வருவாய்த் துறை தலைமை ஆணையர் கே.பி.எஸ். சித்துவும் மோடிஅரசை பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக டுவிட்டர்பதிவு ஒன்றை வெளியிட் டுள்ள கே.பி.எஸ். சித்து, “பயணக் கட்டணத்திற்கான தொகை யில் 85 சதவிகிதத்தை இந்திய ரயில்வே செலுத்துகிறதுஎன்று அதிகாரப்பூர்வ ஆவணம் யாரிடமும் இருந்தால், தயவுசெய்து அதை எனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுங்கள்” என்று சவால் விடுத்துள்ளார்.
“தொழிலாளர்களின் 85 சதவிகித பயணச் செலவை ரயில்வே அமைச்சகம்தான் ஏற்கிறது என யாரேனும் கூறினால், அது ஒருவேளை அமெரிக்காவில் கொடுப்பார்கள் என்றே நான் கூறுவேன்” என்றும் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.