tamilnadu

10 ஆண்டுகளாக மயான பாதைக்காக காத்திருக்கும் பட்டியலின மக்கள்

10 ஆண்டுகளாக மயான பாதைக்காக காத்திருக்கும் பட்டியலின மக்கள்

திருவண்ணாமலை, ஜூலை 23- திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் மயானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என தலித் விடுதலை இயக்கம் சார்பில் பட்டியலின மக்கள் மாவட்ட ஆட்சிய ரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திருவண்ணாமலை, கீழ் பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம் உள்ளிட்ட 12 வட்டாரங் களில் பட்டியலின மக்கள் பரவ லாக வசித்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் மயானம் இல்லாத காரணத்தினால் சாலை யோரங்களிலும், ஏரிக்கரைகளில் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்து வருகின்றனர். சில  கிராமங்களில் மயானம் இருந்தும் அதற்கான சாலை வசதி இல்லா மல் தனிநபர் நிலங்களின் மீது  பயணம் செய்வதால் அசம்பாவி தங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக திருவண்ணாமலை வட்டத்தில் நூக்காம்பாடி கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் 300க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி யில் பட்டியல் இன மக்களுக்கான மயானம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. இது தொடர்பாக கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த  நிலையில், தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலை வர் ச.கருப்பைய்யா தலைமையில் பட்டியலின் மக்கள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் கோரிக்கை மனு  அளித்தனர். நூக்காம்பாடி கிராமம் மற்றும் மாவட்டத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் கிராமங்களில் மயா னம் மற்றும் மயான பாதை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அந்த மக்களின் கோரிக்கையாகும்.