tamilnadu

img

காலிக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த மக்கள்

காலிக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த மக்கள்

தருமபுரி, செப். 15- ரங்காபுரம் மக்கள் குடிநீர் கேட்டு தருமபுரி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்க்கு காலிக் குடங்களுடன் திங்களன்று மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மனுவின் விபரம் பின்வருமாறு: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ரங்காபுரம்  கிராமத்தில் 60 குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த 2  வருடங்களாகவே குடிநீர் சரிவர விநியோகிக்கப்படவில்லை.  ஊராட்சிமன்ற அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகத் தில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் இல்லாமல் விவசாய கிணறுகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம் ஆகவே எங்களின் நலன் கருதி  குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு வில் தெரிவித்துள்ளனர்.