tamilnadu

img

செங்கம் தாலுகாவில்  மக்கள் கோரிக்கை இயக்கம்

செங்கம் தாலுகாவில்  மக்கள் கோரிக்கை இயக்கம்

திருவண்ணாமலை, செப். 9- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவில் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை இயக்கம் நடைபெற்றது. விண்ணவனூர் மற்றும் இறையூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த மக்கள் கோரிக்கை இயக்கத்திற்கு அன்னப்பன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. லட்சுமணன், தாலுகா செயலாளர் பி. கணபதி, சி. எம். பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கிராமத்தில் சாலையை சீரமைக்க வேண்டும், விண்ணவனூர் வழியாக செல்லும் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும், அனைத்து நாட்களிலும் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும், மகளிர் பயன்படுத்தும் இலவச கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக்கம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அப்பகுதி கோரிக்கைகள் குறித்து மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து மனுக்களை கட்சி நிர்வாகிகள் அதிகாரிகளிடம் வழங்கினர்.