கெலமங்கலம் அருகே தவாக நிர்வாகி வெட்டிக் கொலை
கிருஷ்ணகிரி, செப். 18 - கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ராயக்கோட்டை அருகே சொங்கோடசிங்கனள்ளியைச் சோ்ந்த ரவிசங்கா் (35) பன்றி வளா்க்கும் தொழில் செய்து வந்தார். இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கெலமங்கலம் கிழக்கு ஒன்றியப் பொருளாளராக இருந்து வந்தார். சம்பவத்தன்று (செப்.18) அஞ்சாளம் கிராமத்துக்குச் சென்றுள்ளார். அங்கு, ரவிசங்கர் மா்ம நபா்கள் விரட்டி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர். படுகாயம் அடைந்த ரவிசங்கரை அப்பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடற்கூறு ஆய்விற்காக அவரது உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சூளகிரி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருவதுடன் கொலையாளிகளை தேடி வரு கின்றனர்.
தேனீ கொட்டியதில் ஓட்டுநர் பலி
கள்ளக்குறிச்சி,செப்.18 - கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே கூத்தகுடி சிவன் கோவில் பகுதியில் அரச மரம் ஒன்றில் தேனீ கூடு கட்டி இருந்தது. இந்த தேன் கூட்டை சிலர் தேனுக்காக அழித்தனர். அப்போது, தேனீக்கள் பறந்து கொட்டியதில் பாதிக்கப்பட்டோர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த நிலையில், வீட்டில் இருந்த வீராசாமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மீண்டும் அழைத்து வந்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விஜய் இன்ஸ்டிடியூடில் குறைந்த செலவில் பாராமெடிக்கல்
கிருஷ்ணகிரி, செப். 18- மருத்துவ துறையில் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு ஓர் அரிய வாய்ப்பாக ஓசூர் விஜய் இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல், சயின்ஸ் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து முழு விவரம் தெரிந்து கொள்ள கைபேசி எண்: 9791938233 ல் தொடர்பு கொள்ளவும். விஜய் சிருஷ்டி கருவுரு மையம் சார்பில் மாதவிடாய் கோளாறுகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், சினைப்பை நீர்க்கட்டிகள் (பிசிஓ) குறித்த 9,000 ரூபாய் மதிப்பிலான மருத்துவம் தற்போது ரூ.4499 ல் 50 விழுக்காடு சலுகையில் பார்க்கப்படுகிறது. மருத்துவர் ஆலோசனைகள், உணவு மற்றும் உடற்பயிற்சி ஆலோசனைகள் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது. ஓசூர், பெங்களூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் நகரில் உள்ள இந்த மருத்துவமனையில் கிளைகளில் இச்சிகிச்சை களுக்கு தொடர்பு கொண்டு பயன் பெற கைபேசி எண் 9791938330 ல் தொடர்பு கொள்ளலாம் என மருத்துவமனை அறிவித்துள்ளது.