வேலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பாண்டியன் மடுவு தரைப்பாலம் இடிந்து சேதம்
வேலூர், ஆக,8- வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பாண்டி யன் மடுவு கால்வாய் பகுதியில் உள்ள தரைப்பாலம் இடிந்து சேதமடைந்தது. இதனால், அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயி களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு கின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதில், 3 நாட்களுக்கு வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தி ருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஆக.7) வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதி களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் காட்பாடி அருகே அம்முண்டி கிராமம் மிக மோசமாக பாதிக்கப் பட்டுள்ளது. அங்குள்ள அம்முண்டி சர்க்கரை ஆலை பகுதியில் அதிகபட்ச மாக 80.20 மி.மீ. மழை பதிவாகி யுள்ளது. இந்த கனமழையால் பாண்டியன் மடுவு கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், அதன் மீது கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் இடிந்து சேதமடைந்தது. பாலம் இடிந்து ள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளா யுள்ளனர். இந்த பாலம் குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மழையால் பாலம் இடிந்துள்ளது. எனவே, இடிந்த தரைப்பாலத்தை நிலைத்தன்மை கொண்ட புதிய பால மாக கட்டிக்கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து ள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து அம்முண்டி கிரா மத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்தி ரன் கூறியதாவது, “எங்கள் நிலத்திற்கு பாண்டியன் மடுவு கால்வாயை கடந்து தான் செல்ல வேண்டும். தற்போது மழையால் தரைப்பாலம் முற்றிலும் உடைந்து விழுந்து விட்டது. பாலம் பல மாதங்களாகவே மிகவும் மோசமான நிலையில் இருந்தது. தற்போது மழை காரணமாக பாலம் முற்றிலும் உடைந்து ள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
வடதமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வட தமிழகத்தில் சனிக்கிழமை (ஆக.9) ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் 14 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.