வழிந்தோடும் கழிவுநீர்
தரமணி மகாத்மா காந்தி நகர், வி.வி.கோவில் தெருவில் நீண்டநாட்களாக கழிவு நீர் வழிந்தோடுகிறது. கழிவுநீர் தேங்கி நிற்கும் இந்தத் தெருவழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால் ஆங்காங்கே பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?