tamilnadu

img

பட்டா வழங்கியும் கிராம கணக்கில் திருத்தம் செய்யாமல் புறக்கணிக்கும் அதிகாரிகள்

பட்டா வழங்கியும் கிராம கணக்கில் திருத்தம் செய்யாமல் புறக்கணிக்கும் அதிகாரிகள் 

மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் தலைவர்கள் புகார்

கடலூர், ஜூலை 7 - விருத்தாசலம் அருகே கார்குடல் கிராமத்தில் பட்டா வழங்கி 25 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் கிராம கணக்கில் திருத்தம் செய்யப்படவில்லை என்று  வலியுறுத்தி சிபிஎம் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன் மற்றும் கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் ஆர்.கலைச்செல்வன் ஆகி யோர் தலைமையில் கிராம மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர்.  அந்த மனுவில், விருத்தாசலத்தை அடுத்துள்ள கார்குடல் பிற்படுத்தப்பட்டோர் பகுதியைச் சேர்ந்த 52 குடும்பத்தினர் 60 ஆண்டுகளாக அந்த பகுதியில் வசித்து வரு வதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டில் அவர்களுக்கு ஒப்படைப்பு பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில் வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்தி வரு கின்றனர். அரசு தொகுப்பு வீடு, தானே வீடு, ஐஏ ஒய் வீடுகளும் கட்டி குடி யிருந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக வீட்டு வரி ரசீது வழங்கப்படவில்லை. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டா விவரம் கார்குடல் கிராம கணக்கில் திருத்தம் செய்யப்படவில்லை என்று கூறுகின்றனர். எனவே தங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்படைப்பு பட்டா இடத்தை வகை மாற்றம் செய்து கணக்கில் திருத்தம் செய்து ஆன்லைன் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.