சென்னை,பிப்.23- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஆரம்பத் தலைவர்க ளில் ஒருவரும் மத்திய அமைப்பின் வளர்ச்சிக்கு ஓய்வறிய உழைத் தவருமான தோழர் ஏஆர்கே என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஏ.ஆர். கிருஷ்னமுர்த்தி உடல் நலக் குறைவால் பிப்.21 அன்று சென்னையில் காலமானார். அன்னாரது இறுதி நிகழ்ச்சியில் மத்திய அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.எஸ். சுப்பிரமணியன், எஸ். அப்புனு, முத்து சாமி, என்.கிருஷ்ணமுர்த்தி, டி.கே.சம்பத் ராவ், வாசுதேவன், சீதர், சண்முகம் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தி னர். மத்திய அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர்எ.கே.பத்மநாபன், முன்னாள் மாநிலப் பொருளாளர் வி.மீனாட்சி சுந்தரம் ஆகியோர் தங்களது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்தனர்.