tamilnadu

img

சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம்!

சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
செம்பியம் காவல் உதவி ஆணையர் பிரவீன் குமார், சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராகவும், சென்னை காவல் துறை பயிற்சி பிரிவு உதவி ஆணையர் முனியசாமி, அண்ணா நகர் உதவி ஆணையராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 17 காவல் உதவி ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.