செங்கல்பட்டில் ரூ.130 கோடியில் புதிய பேருந்து முனையம் டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும்
செங்கல்பட்டு, அக்.17- சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் செங்கல்பட்டு மெயின் ரோட்டில் ரூ.130 கோடி செலவில் ஒரு புதிய நவீன பேருந்து முனையத்தை கட்டி வருகிறது. இது டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய முனையம் செங்கல்பட்டு மெயின் ரோட்டில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். சுமார் 40,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையும் இந்த முனையத்தில் 46 பேருந்து நிறுத்தங்களும், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி களும் செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக கடைகள் மற்றும் உண வகங்களும் அமைக்கப்படும். தினமும் வேலூர், திருச்சி, பெங்களூரு, ஓசூர் போன்ற ஊர்களுக்குச் செல்லும் 600-க்கும் மேற்பட்ட நீண்ட தூர பேருந்துகள் இந்த முனையத்திலிருந்து இயக்கப்படும். தற்போதுள்ள பழைய பேருந்து முனையம் செங்கல்பட்டு ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ளதால், அதிக பேருந்து போக்குவரத்து மற்றும் பயணிகள் கூட்டம் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புதிய முனையம் திறக்கப்பட்ட பிறகு பயணிகள் ரயில் நிலை யத்திற்குச் செல்ல கூடுதல் செலவு ஏற்படும் என உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்த னர். இதை தீர்க்க, ரயில் நிலை யத்திற்கு அரு கிலேயே ஒரு பேருந்து நிறுத்தம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒரு பன்நோக்கு வசதியாக அமையும் என போக்குவரத்துத் துறை அதிகாரி தெரி வித்தார்.