tamilnadu

img

பெண் சிறுநீரகவியல் நிபுணர்கள் பங்கேற்ற தேசிய மாநாடு

பெண் சிறுநீரகவியல்  நிபுணர்கள்  பங்கேற்ற தேசிய மாநாடு

சென்னையில் துவங்கியது

சென்னை, ஆக. 30-  இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட சிறுநீரக மருத்து வர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் பங்கேற்றுள்ள வினிகான் 2025 மாநாடு சென்னையில் சனிக்கிழமை (ஆக.30)  தொடங்கியது. பெண்கள் சிறுநீரகவியல் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த  மாநாட்டை தலைமை விருந்தினரும் உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி மற்றும் எம்எஸ்எஸ்ஆர்எப் தலை வருமான டாக்டர் சௌமியா சுவாமிநாதன் துவக்கிவைத்தார். இந்திய சிறுநீரகவியல் சங்கச் செய லாளர் டாக்டர் ஷியாம் பன்சால், இந்திய உறுப்பு மாற்று சங்கத் தலைவர் டாக்டர் அர்பிதா ரே சௌத்ரி மற்றும் சிறுநீரக வாரியர்ஸ் நிறுவனர் வசுந்தரா ராகவன் ஆகியோர்  சிறப்பு  மலரை வெளியிட்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆசிரியர்களின் தலை மையில் கல்வி அமர்வுகள், மருத்துவ சவால்கள் குறித்த குழு விவாதங்கள், டயாலிசிஸ் தொழில்நுட்பம் குறித்த நேரடி பயிற்சி பட்டறைகள், முதுகலை மாண வர்களுக்கான வினாடி வினா போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.