tamilnadu

img

கஞ்சா போதையில் கொலை வெறி தாக்குதல் துப்பாக்கியால் சுட்டு குற்றவாளி பிடிப்பு

கஞ்சா போதையில் கொலை வெறி தாக்குதல் துப்பாக்கியால் சுட்டு குற்றவாளி பிடிப்பு

கடலூர், செப்.9 - விருத்தாசலத்தில் கஞ்சா போதை யில் வாலிபர்கள் மூன்று பேர் செவ்வாய்க்கிழமை (செப்.9) மூன்று இடங்களில் 4 பேரை சரமாரி தாக்கியதில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருத்தாசலம் பழ மலைநாதர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 25). இவர் அதே பகுதி யில் உள்ள தனியார் மண்டபம் கட்டும் இடத்தில் கட்டு மான பணியும் செய்து கொண்டு அங்கு காவலாளியாகவும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், அந்த கட்டிடத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். செவ்வாய்க்கிழமை (செப்.9) அதி காலையில் அதே பகுதியைச் சேர்ந்த கந்த வேல், பாலாஜி, சிவா ஆகிய மூன்று பேர் கஞ்சா போதை யில் அந்த மண்டபத்தில் உள்ளே நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த கார்த்திகை சரமாரியாக கம்பியாலும், கட்டையாலும் கொலை வெறியோடு தாக்கி உள்ள னர். அதனை அந்த கும்பல் வீடியோவாகவும் பதிவிட்டுள்ளனர். பலத்த காயமடைந்த கார்த்திக் தப்பித்து ஓடிவந்துள்ளார். பின்னர் கார்த்திகை உறவினர்கள் மீட்டு விருத்தா சலம் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். கஞ்சா வாலி பர்கள் மேலும் சில பகுதியில் 3 பேரை சரமாரியாக  தாக்கியுள்ளனர். அவர்களும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார்த்திக்கை தாக்கும் வீடியோவை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட  கந்தவேல் மற்றும் அவரது நண்பர்களை விருத்தாசலம் போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான கந்தவேலு என்ற இளைஞர் விருத்தாசலம் அருகே ரயில்வே தண்டவாளம் அருகே பதுங்கி இருப்ப தாக போலீசாருக்கு தக வல் கிடைத்தது. அங்கு சென்ற காவலர்களை கந்த வேல் கடுமையாக தாக்கி யுள்ளார். இதனைத் தொடர்ந்து, துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.  இந்த சம்ப வத்தில் காவலர்கள் வேல்முருகன், வீரமணி ஆகியோர் படுகாயமடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரும் இளை ஞர்கள் மற்றும் காவல்துறை யினரை காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டார்.