இந்தியாவில் நகர்ப்புறங்களை விட, ஊரகப் பகுதிகளில் அதிக அளவில் இணைய சேவை பயன்படுத்தப்படுவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ (IAMAI) வெளியிட்ட தரவுகளின்படி, தற்போது நகர்ப்புறங்களில் 39.7 கோடி பேரும், ஊரகப் பகுதிகளில் 48 கோடி பேரும் இணைய சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இது 2030ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புறங்களில் 54 கோடியாகவும், ஊரகப் பகுதிகளில் 70 கோடியாகவும் அதிகரிக்கும் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இணைய சேவையைப் பயன்படுத்துபவர்களில் ஆண்கள் 47 கோடியும், பெண்கள் 41 கோடியும் உள்ளனர்.
ஸ்மார்ட்போன்களின் அதிகரித்த பயன்பாடே, இணைய சேவை மக்கள் மத்தியில் வேகமாகப் பரவ முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
