சென்னை, மே 13-சிறு வீடியோக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் டிக் டாக் என்ற மொபைல் அப்ளிகேஷன் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஐ.ஓ.எஸ்.தளங்களில் மிக அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்படும் நிலையை மீண்டும் எட்டியுள்ளது. ‘இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என்ற அறிவிப்போடு, களமிறங்கியுள்ள இது, தற்போது உலகில் மிக அதிக அளவில் வீடியோவைப் பரப்பும் செயலிஎன்ற பெயரை மீண்டும் கைப்பற்றியுள்ளது. இதன் பயனாளர்களின் எண்ணிக்கை 20 கோடியை தாண்டியுள்ளதாக இந்தியாவுக்கான டிக்டாக் மூத்த அதிகாரி சுமிதாஸ் ராஜகோபால், கூறினார்.