மின்சார வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்துவோம் என்ற திமுக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் செவ்வாயன்று (செப்.23) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு செங்கை கிளை தலைவர் எம்.மயில்வாகனன் தலைமையில் நடைபெற்றது. கோரிக்கை விளக்கி செங்கை திட்ட செயலாளர் வி. தேவகுமார், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு கன்வீனர் எஸ்.மனோமங்கையர்கரசி, ஓய்வுபெற்ற நல அமைப்பு கிளை செயலாளர் எம்.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். திட்டப் பொருளாளர் கோ.ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.
