மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், மின்னல் ஊராட்சி, சாலை கைலாசபுரம் பேருந்து நிலையம் அருகில் ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜி. வசந்த ராம்குமார் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் சிறப்பு அழைப்பாளராக, நெமிலி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு கலந்துகொண்டு, முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, அரசு சலுகைகள் பெறுவதற்கான ஆணைகள் மற்றும் சக்கர நாற்காலி உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.