நறுவீ மருத்துவமனையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
வேலூர் நறுவீ மருத்துவமனையில் ‘எல்கியூப்’ மருத்துவ குழுவுடன் இணைந்து உலக தரத்திலான கல்லீரல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் மற்றும் ‘எல் கியூப்’ மருத்துவ குழுவின் கல்லீரல் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜாய் வர்கீஸ் பரிமாறிக்கொண்டனர். நறுவீ மருத்துவமனை செயல் இயக்குநர் மருத்துவர் பால் ஹென்றி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், தலைமை இயக்குநர் அலுவலர் சரவணன் ராமன், பொது மேலாளர் நிதின் சம்பத் உடனிருந்தனர்.