திருவள்ளுவர் சாலை டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்
மாதர் சங்க மயிலை பகுதி மாநாடு கோரிக்கை
சென்னை, ஜூலை 20 - 123வது வட்டம், திருவள்ளுவர் சாலை யில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மாதர் சங்கத்தின் மயிலாப்பூர் பகுதிக்குழு 15ஆவது மயிலை பகுதி மாநாடு சனிக்கிழமையன்று (ஜூலை 19) மயிலாப்பூரில் நடைபெற்றது. மாநாட்டில், மயிலாப்பூர் தொகுதியில் வழிபாட்டு தலங்கள், பள்ளிகளுக்கு அருகாமையில் 500 மீட்டர் தொலைவிற்குள்ளாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும், பழுதடைந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை புதுப்பித்து கட்டித்தர வேண்டும், விண்ணப் பிக்கும் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும், ரேசன் கடை களில் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு பகுதித் தலைவர் எஸ்.யசோதா தலைமை தாங்கினார். சங்க கொடியை கே.கண்ணியம்மாள் ஏற்றினார். பகுதி துணைத்தலைவர் ஆர்.கங்கா வர வேற்றார். பகுதிக்குழு உறுப்பினர் கல்பனா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.விஜயகுமாரி துவக்கவுரையாற்றினார். பகுதிச் செயலாளர் எஸ்.சுரேகா வேலை அறிக்கையும், பொரு ளாளர் கே.காந்திலட்சுமி வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். சென்னை மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமார், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.விஜயா, எம்.சரஸ்வதி எம்.சி., வாலிபர் சங்க பகுதிச் செயலாளர் எஸ்.மகேஷ் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாவட்ட பொருளாளர் ஜெ.ஜூலியட் நிறைவுரை யாற்றினார். 11 பேர் கொண்ட பகுதிக்குழுவின் தலைவ ராக எஸ்.யசோதா, செயலாளராக எஸ்.சுரேகா, பொருளாளராக வசுமதி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.
வாலாஜா ஊராட்சி ஒன்றியம், ஏகாம்பரநல்லூர் ஊராட்சி, தக்கம்பாளையம் கிராமத்தில் 6 இருளர்பயனாளிகளுக்கு PMJANMAN திட்டத்தில் தலா ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு வருவதை சனிக்கிழமை (ஜூலை 18) மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்து பணியை விரைவுபடுத்த உத்தரவிட்டார். மருதம்பாக்கம் ஊராட்சியில் வட்டார நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் மரம் நடுந்திட்டங்கள் அனைத்து வட்டங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.