வாலிபர் சங்க மாநில மாநாட்டிற்கு தியாகி ஆதித்ய வர்த்தன ஸ்ரீ நினைவு சுடர்
கிருஷ்ணகிரி, அக்.12 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18வது மாநில மாநாடு ஓசூரில் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதன் துவக்கமாக தியாகி ஆதித்ய வர்த்தன ஸ்ரீ நினைவு சுடர் பயணம் துவங்கியது. அனுசோனை கிராமத்தைச் சேர்ந்த தோழர் ஆதித்ய வர்த்தன ஸ்ரீ, தேன்கனிக் கோட்டை வட்டம் கேலமங்கலம் ஒன்றியப் பகுதிகளில் வாலிபர் சங்கத்தை உருவாக்கி, கந்துவட்டி, கள்ளச்சாராயக் கொடுமை களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்தார். 1991ல் வாலிபர் சங்கத்தின் செயலாள ரான இவரை, கள்ளச்சாராயம் கந்துவட்டிக் கும்பல் இரவில் வீட்டுக்குள் புகுந்து சரமாரி யாக வெட்டிக் கொன்றது. அவர் சிந்திய ரத்தத்தில் மாவட்டம் முழுவதும் வாலிபர் சங்கம் வீறுகொண்டு வளர்ந்தது. அதன் தொடர்ச்சியே கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூ ரில் வாலிபர் சங்க மாநில மாநாடு தற்போது நடைபெறுகிறது. வாலிபர் சங்க மாநில மாநாட்டிற் கான தியாகி ஆதித்ய வர்த்தன ஸ்ரீ நினைவுச் சுடரை அனுசோனையிலிருந்து எடுத்துச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.இளவரசன் தலைமையில், மாவட்டப் பொருளாளர் சி.கணேசன் வரவேற்க, வாலிபர் சங்க முன்னாள் மாநிலத் தலைவரும் தற்போது மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினருமான முத்துகண்ணன் முன்னி லையில், வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர், சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், தோழர் ஆதித்ய வர்த்தன ஸ்ரீயின் 80 வயது தாயார் சரஸ்வதி ஆகியோர் ஆதித்ய வர்மன் ஸ்ரீ நினைவுச் சுடரை மாவட்டப் பொருளாளர் கணேசனிடம் அளித்தனர். இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.சேகர், சி.பி.ஜெயராமன், கேல மங்கலம் வட்டச் செயலாளர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் அனுமப்பா, சீனிவாசன், பகுதிச் செயலாளர் தூர்வாசன், வாலிபர் சங்க நிர்வாகிகள் ஹரிஷ், அமரீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிற்பகல் நினைவுச் சுடர் மாநாட்டு அரங்கை சென்றடைந்தது.
