ராணிப்பேட்டையில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்
ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த கோரி எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் (லிக்காய்) சார்பில் புதனன்று (ஆக.20) ராணிப்பேட்டை எல்ஐசி அலுவலகம் முன்பு கிளை கவுரவ தலைவர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முகவர்கள் வாங்கி வந்த கமிஷன் அளவைக் குறைக்கக் கூடாது. குழு காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில செயலாளர் தா. வெங்கடேசன் பேசினார். துணை செயலாளர்கள் எம். செல்வம், கணபதி, என். செல்வம், கிளை நிர்வாகி கன்னியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர். இறுதியாக கிளை பொருளாளர் மணிமாறன் நன்றி கூறினார்.