முல்படுத்துக எல்ஐசி முகவர்கள் சங்க மாநாடு கோரிக்கை ஓசூர், ஜூலை 28- ஓசூரில் எல்ஐசி முகவர்கள் (லிக்காய்) சங்கத்தின் வட்டக்கிளை 4 வது மாநாடு ஓசூரில் தோழர்.சுத்தானந்தம் நினைவரங்கில், மூத்த உறுப்பினர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. சேலம் கோட்டத் தலைவர் முருகன் நாயனார் துவக்கிவைத்தார்.கோட்டச் செயலாளர் சிவமணி சிறப்புரையாற்றினார்.சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் வாழ்த்தி பேசினார் வட்டச் செயலாளர் கிருஷ்ணப்பா வேலை அறிக்கையும்,பொருளாளர் ஆறுமுகம் வரவு செலவும் சமர்ப்பித்தனர். எல்ஐசியை தனியாருக்கு முற்றிலுமா விற்றிட துடிக்கும் ஒன்றிய அரசின் தேச விரோத கொள்கையை கைவிட,எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை,அரசு துறை நிறுவனங்களை பாதுகாத்திட, , முகவர்கள் உரிமைகளை பாதுகாத்திட,முகவர்களுக்கு பழைய கமிஷன் முறையை அமுல்படுத்திட, லிக்காய் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொண்டதை அமுல்படுத்த வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கவுரவத்தலைவராக சந்திரசேகரன், தலை வராக சொன்னே கவுடா,செயல் தலைவராக கிருஷ்ணப்பா, செயலாளராக ராகவேந்திரா,பொருளாளராக அண்ணாஜி மற்றும் 10 நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில பொருளாளர் தாமோதரன் நிறைவுரையாற்றினார்.மோகன் ராவ் நன்றி கூறினார்.
பிஎஸ்என்எல் சிறப்பு விற்பனை புதுச்சேரி, ஜூலை28- பிஎஸ்என்எல் சார்பில் சிறப்பு விற்பனை மேளா ஜூலை 31 வரை புதுச்சேரியில் நடைபெறுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதுச்சேரி துணை பொது மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சார்பில் சிறப்பு மேளா விற்பனை முகாம் திங்கள் கிழமை துவங்கி வியாழக்கிழமை வரை 29,30,31 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் துவங்கி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதி பொது தொலைபேசி நிலையம், மேட்டுப்பாளையம், வில்லியனூர், மதகடிபட்டு, முதலியார்பேட் போஸ்ட் ஆபீஸ் அலுவலகம் அருகில், கரியமாணிக்கம், திருக்கனூர், சஞ்சீவி நகர், சாரம் பழைய கலெக்டர் ஆபீஸ் , மரப்பாலம், அஜிஸ் நகர், பாகூர், திருபுவனை, கோட்டகுப்பம் இந்தியன் பேங்க் அருகில், லாஸ்பேட் ராஜீவ் பார்க் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு மேளாவில் ரூ.289/-மதிப்புள்ள புதிய சிம் கார்ட் ரூ.80 மட்டுமே செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.இந்த சிம் கார்டில் 45 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா & 100 SMS மற்றும் அளவில்லாமல் அழைப்புகள் இலவசம். வாடிக்கையாளர் தங்களிடம் உள்ள 4ஜி சிம் கார்டு தானா என விவரம் அறிந்து கொள்ள 9442824365 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால்கொடுத்து தெரிந்து கொள்ளலாம். நிலுவை தொகை தள்ளுபடியில் வசூல் மேலும் எப்டிடிஎச் மறு இணைப்பு மற்றும் நிலுவை தொகையை தள்ளுபடியில் வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் புதுச்சேரி வில்லியனூர் & மேட்டுப்பாளையம் மையங்களில் நடைபெறும்.KYC அப்டேட் தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தாங்களிடம் உள்ள குறுஞ்செய்தியுடன் மேளா நடைபெறும் இடங்களை அணுகி அப்டேட் செய்து கொள்ளவும். மேற்கண்ட இடங்களில் புதிய 4G-சிம் கார்டை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் 4 GB இலவச டேட்டாவையும் பெற்றுக்கொள்ளலாம். இச்சலுகைகளை இச்சிறப்பு மேளா முலம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அச்செய்தி குறிப்பில் கூறிப்பட்டள்ளது.