tamilnadu

img

அத்திவரதரால் மழை கொட்டுகிறதா? மறுத்த வெதர்மேனுக்கு காவிக்கூட்டம்  மிரட்டல்

சென்னை:
அத்திவரதர் பிரசன்னம் நடக்கும்பொழுதெல்லாம் மழை கொட்டும் என்ற பொய்யான பரப்புரைக்கு மாறாக, ஆய்வின் அடிப்படையில் 1854 முதல் இந்தக் காலகட்டம்வரை மழை பெய்ததில்லை என்று  வானிலை ஆய்வாளர் உண்மையை வெளிப்படுத்தியதால் ஆத்திரமடைந்த காவிக்கூட்டம் வெதர்மேனுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

அத்திவரதர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் காலத்தில் எல்லாம் தமிழகத்தில் மழை பெய்து பஞ்சம் நீங்கும் என்று கதை விடப்பட்டுள்ளது. இவ்வாறு பரப்பப்பட்டு வரும் போலியான தகவலை தகுந்த சான்றுகளோடு தமிழ்நாடு வெதர்மேன் என்ற காலநிலையை அறிவியல் பூர்வமாக துல்லியமாக கணித்துக் கூறும் தமிழ்நாடு  வானிலை ஆய்வாளர் கூறியுள்ளார்.இது குறித்து அவரது முகநூல் பதிவில் ஊடகம் மற்றும் பழைய ஆவணங்களில் இருந்து 18.8.1854, 13.6.1892, 12.7.1937 மற்றும் 02.07.1979 ஆகிய ஆண்டுகளில் அத்திவரதர் சிலையை வெளிக்கொண்டுவந்த காலகட்டம் மற்றும் தற்போது 01.07.2019 காலத்தில் மழை பதிவுகள் குறித்து பல்வேறு தரப்பில் எழுந்த கோரிக்கையை ஏற்றும் சான்றுகளோடு பதிவு செய்துள்ளார்.சென்னையைப் பொறுத்தவரை தென்கிழக்கு பருவமழையின் காரணமாக நல்ல மழைபெற்றுக் கொண்டே இருந்துவந்துள்ளது, இருப்பினும் இடை இடையே மழையின்மையை சந்தித்துள்ளது.  அத்திவரதர் குறித்தும் அதுதொடர்பான மழைப் பொழிவு குறித்தும்  சான்றுகளோடு அவர் எழுதிய போது அவருடைய பதிவுகள் தடைசெய்யப்பட்டன.

சான்றுகளின் முடிவின் படி அத்திவரதரை தண்ணீரிலிருந்து தூக்கி வெளியே வைத்த 1854 மற்றும் 1892 இரண்டு ஆண்டுகளும் கடுமையான தண்ணீர்பற்றாக்குறையை தமிழகம் சந்தித்துள்ளது, அதே போல் கடைசி 1979-ஆம் ஆண்டிலும் தமிழகத்தில்  மழை குறைவாகவே இருந்தது. ஒரே ஒரு ஆண்டு அதாவது 1937-ஆம் ஆண்டு மட்டும் நல்ல மழை இருந்தது, 1933 ஆம் ஆண்டிலிருந்து அதாவது 7 ஆண்டுகள் தொடர்ந்து நல்லமழையை தமிழகம் பெற்றுள்ளது, ஆகவே மழைக்கும் அத்திவரதனை குளத்தில் இருந்து தூக்கி வெளியே வைப்பதற்கும் தொடர்பில்லை. ஆய்வின் அடிப்படையில் விஞ்ஞானப் பார்வையில் வானிலை  ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் இவ்வாறு கூறியிருக்கிறார். சமுகவலை தளத்தில் இதனைப் பதிவிட்ட நிலையில்,  அவரை பிற்போக்குவாதிகளும், சங் பரிவார்களும், காவிகளும், கடவுளையும், மூடநம்பிக்கைகளையும் வைத்து பிழைப்பு நடத்துபவர்களும் மதவாதக் கண்ணோட்டத்துடன் அணுகும் பிற்போக்குவாதிகளும் மிரட்டியுள்ளனர். இந்த  தரம் தாழ்ந்த போக்கு கண்டிக்கத்தக்கது என்று  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  தெரிவித்துள்ளார்.

;