tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

திருவள்ளூர், ஆக. 1- செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் பெருமாள் கோவில் தெரு சேர்ந்தவர் காமராஜ் என்கிற விக்டர் (வயது 54), ஆன்மிக சொற்பொழிவு நடத்திய வருகிறார். இவருடைய மனைவி அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மைய ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். இந்த நிலையில் டியூஷன் பயிலும் பெண் குழந்தைகளுக்கு விக்டர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த தாக பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர் செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் காமராஜ் என்கிற விக்டரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பொன்னேரி  நீதிமன்றத்தில் ஆஜர்   படுத்தி புழல் சிறை யில் அடைத்தனர்.

தண்ணீர்,  தூசி உள்ளே புகாத அதிநவீன செல்போன் அறிமுகம்

சென்னை, ஆக.1-  விவோ நிறுவனம்  தனது டி மாடல் வரிசை யில் புதிய டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.  இந்த ஸ்மார்ட்போன் வரும் 5-ந்தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் விவோவின் ஆன்லைன் இணையதளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சில்லறை ஷோரூம்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் தொழில்துறையில் முன்ன ணியில் உள்ள தண்ணீர் மற்றும் தூசி பாதுகாப்பு 2- ஐபி68 மற்றும் ஐபி69 மதிப்பீடுகளைக் கொண்ட மிக மெல்லிய குவாட் வளைந்த டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் ஆகும். அதிநவீன தொழில்  நுட்பத்துடன் பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை, ஆக.1-  ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை 8.23 சதவீதம் அதி கரித்துள்ளது. மேலும், விமானங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் இருந்து இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை புறப்பாடு மற்றும் வருகை பயணிகள் என மொத்தம் 30,49,693 பேர் பயணித்துள்ளனர். ஆனால், கடந்த 2024ம் ஆண்டு, முதல் 6 மாதங்க ளில் 29,73,265 பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சர்வதேச முனையத்தில் பயணிகள் எண்ணிக்கை 2.57 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டு முனையத்தில், இந்தாண்டு ஜனவரி 1ம்தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை வருகை, புறப்பாடு பயணிகள் என மொத்தம் 86,93,278 பேர் பய ணித்துள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு இதே காலகட்டத்தில் பயணித்த பயணிகள் எண்ணிக்கை 78,78,678. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகை யில், இந்த ஆண்டில் முதல் 6 மாதங்களில் பயணிகள் எண்ணிக்கை 10.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களில் இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் பய ணித்த வருகை, புறப்பாடு பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,17,42,971. கடந்த 2024ம் ஆண்டு முதல் 6 மாதங்களில் சர்வதே சம் மற்றும் உள்நாட்டு முனையங்களில் பயணித்த வருகை, புறப்பாடு பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,08,51,944. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் முதல் 6 மாதங்களில், சர்வ தேச மற்றும் உள்நாட்டு நிலையங்களில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 8.23 சதவீதம் அதிகரித்து உள்ளது.