தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு
போலி மருத்துவ தம்பதி உள்பட 6 பேர் கைது
கடலூர், ஜூலை 23 - கடலூர் புதுப்பாளையம் ஆற்றங்கரை வீதியில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டு வந்த சம்பவம் வெளிவந்துள்ளது. இதையடுத்து, போலி மருத்துவ தம்பதி உள்பட 6 பேர் கைது செய்ய ப்பட்டுள்ளனர். கடலூர் டி.எஸ்.பி ரூபன் குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் மணிமேகலைக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, கடலூர் புதுநகர் போலீ சார் மற்றும் நலப்பணிகள் இணை இயக்கு நர் தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தி னர்.அப்போது, சிவகுருநாதன் (55) மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி (40) ஆகியோர் சட்டவிரோதமாக பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்ததும், போலி மருத்துவ தம்பதிகளாக செயல்பட்டு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கருக்கலைப்பு செய்வ தற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பறி முதல் செய்யப்பட்டன. மேலும், போலீஸ் விசாரணையில் மருந்து விற்பனை பிரதிநிதி மூர்த்தி (33), விருத்தா சலத்தில் நர்சிங் பயிற்சி மையம் நடத்தி வரும் வீரமணி (36), கடலூர் அடுத்த காரைக் காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியர் அபியாள் (50), அங்கு மருந்தாளுனராக வேலை பார்த்து வரும் தங்கம் (43) ஆகியோர் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிவகுருநாதன் பி.எஸ்.சி. வேளாண்மை படித்து விட்டு, டெல்லியில் சித்த மருத்துவம் படித்ததாக சான்றிதழ் பெற்றுள்ளார். அந்த சான்றிதழை வைத்து 2012 ஆம் ஆண்டு முதல் நர்சிங் பயிற்சி மையத்தை நடத்தி வந்துள்ளார். அவரது சான்றிதழின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவரது மனைவி உமா மகேஸ்வரி நர்சிங் படித்துள்ளார். தகாத உறவுகள் மூலம் கருவுறும் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் அதிக அளவில் வந்து கருக்கலைப்பு செய்துள் ளதாக தெரிய வருகிறது. பெண்களின் தகுதி க்கேற்ப கட்டணம் வசூலித்து, இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. நர்சிங் பயிற்சி மையத்தை மூட மருத்துவத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது”என்றார்.