கண்டுகொள்ளப்படாத மனுக்களும், கவனம் பெறும் பெட்ரோல் கேன்களும்!
திருப்பூர், செப்.15- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் கடந்த ஆறு மாதத்தில் 20 க்கும் மேற்பட் டோர் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக கூறிய சம்ப வங்கள் நடைபெற்றுள்ளன. ஆட்சியரகத்தில் கொடுக்கும் மனுக்களுக்கு உரிய தீர்வு கிடைக் காத நிலையில்தான் கவனத்தை ஈர்க்க இது போன்ற ஆபத்தான முயற்சிகளில் அவர் கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே சொத்து பிரச்சனை காரணமாக உடலில் பெட் ரோல் ஊற்றி தீக்குளித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். திருப்பூர், மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் வாரம்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்ட வளாகத்தில் மண்ணெண் ணெய், பெட்ரோல் ஊற்றிக்கொள்ளும் சம்பவங் கள் தொடர் கதையாக உள்ளன. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நில பிரச்சனை தொடர்பாக ஒரு வர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார். அங்கிருந்த காவலர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி சமாதானம் செய்தனர். கடந்த ஆறு மாதத் தில் 20க்கும் மேற்பட்ட முறை இதுபோன்ற சம்ப வம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றுள்ளது. நல்வாய்ப்பாக எந்த உயிர் சேத மும் நிகழவில்லை. எனினும் ஆட்சியரகத்தில் கொடுக்கும் மனுக் களின் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதும், அர சுத் துறைக்கு சம்பந்தம் இல்லாமல் சொத்து, நிலம் தொடர்பான பிரச்சனை போன்றவற் றில் உரிய வழிகாட்டுதல் வழங்கி தீர்வுக்கு முயற்சி செய்வதுடன், கவனத்தை ஈர்க்கும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு தக்க மனநல ஆலோசனைகள் வழங்குவதும் தேவை. இவை எல்லாவற்றுடனும் காவல் துறை கண்கா ணிப்பும் மேற்கொள்ள வேண்டும். வெறுமனே காவல் துறை கண்காணிப்பின் மூலம் இதை தடுக்க நினைத்தால், பிரச்சனைகள் தொடரும் வரை புதுப்புது வடிவத்தில் முயற்சிகளும் தொட ரும் என்பதை அரசு நிர்வாகம் உணர வேண் டும். இடைதரகர்களுக்கு இரையாகும் பொதுமக்கள்: இன்னொருபுறம் இலவச வீட்டுமனை பட்டா வாங்கித் தருவதாக கூறி இடைதரகர்கள் ரூ.200 முதல் ரூ.500 வரை பெற்று கொண்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரு கின்றனர். மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக கூறியும் மோசடிகள் நடைபெறுகிறது. இலவச வீட்டுமனை பெறுவ தற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவ ணங்கள், பெறுவதற்கான தகுதி உள்ளிட்ட வைகள் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால், இடைதரகர்கள் பொதுமக்களிடம் பணம் பெற்றுக் கொண்டு பட்டா வாங்கி தருவதாக போலி நம்பிக்கை தருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் ஆங்காங்கே இடைதரகர்கள் குறித்து எச்சரிக்கையும், இலவச வீட்டுமனை பட்டா, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பெறுவ தற்கு உரிய வழிமுறை குறித்து விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும். முறையாக கண்கானித்து இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட வீட்டுமனைப் பட்டா பிரச்சனையில் அரசு மெத்தனப் போக்கை களைந்து, பல ஆண்டு காலமாக குடியிருக்க ஒரு வீடு வேண்டும் என தவிப்போடு முயன்று வரும் மக்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள் எனத் தெரிந்தால் உடனடியாக வீட்டுமனை ஒதுக்கிட வேண்டியது அரசின் கடமை.