tamilnadu

img

பஞ்சாப்பிலும் காலை உணவுத் திட்டம் கொண்டு வர விரும்புகிறேன்

பஞ்சாப்பிலும் காலை உணவுத் திட்டம்  கொண்டு வர விரும்புகிறேன்பஞ்சாப்பிலும் காலை உணவுத் திட்டம்  கொண்டு வர விரும்புகிறேன்

முதலமைச்சர் பகவந்த் மான் பேச்சு

முதலமைச்சர் பகவந்த் மான் பேச்சு சென்னை, ஆக.26 - தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை  உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பஞ்சாப் மாநில முதலமைச் சர் பகவந்த் மான் பேசுகையில், “காலை  உணவுத் திட்டம் போல் சிறந்தது வேறெதுவும் இல்லை. பசியுடன் வரும் குழந்தைகளால் படிக்க முடியாது. தமிழகத்தை போல் பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வர விரும்புகிறேன்” என்று தெரிவித்தார். “சுமார் 18 லட்சத்துக்கும் அதிக மான மாணவர்களுக்கு காலை உணவு  வழங்குவது என்பது மிகப்பெரிய சாதனை. குழந்தைகளின் உடல்நலத் தில் மாநில அரசு அக்கறை கொண்டு உள்ளது. பஞ்சாபில் அனைத்து நகரங் களிலும் தென்னிந்திய உணவுகளான உப்புமா, தோசை போன்றவை விற்கப் படுகிறது. தென்னிந்திய உணவுகள் தேசிய உணவு போல், நாடு முழு வதும் விற்கப்படுகிறது. பஞ்சாப் உணவு கள் தமிழகத்திலும் விற்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட் டார். “கல்வி, சுகாதாரத்துக்கு பஞ்சாப்  அரசும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆம் ஆத்மி கிளினிக்-களில் 70,000 பேர் நாள்தோறும் இலவச மாக சிகிச்சை பெறுகிறார்கள். நாளையே பஞ்சாப் அமைச்சரவை யில் காலை உணவுத் திட்டம் குறித்து  விவாதிக்கவுள்ளேன். குழந்தைகள் தான் நாட்டின் எதிர்காலம், அவர்களால் தான் நாடு முன்னேறும். அப்போதுதான்  வளர்ச்சி அடைந்த இந்தியாவை உரு வாக்க முடியும், வெறும் பேச்சுகளால் முடியாது” என்று பகவந்த் மான் வலி யுறுத்தினார். மேலும், “பஞ்சாப் என்பது பகத்சிங்,  ராஜகுரு போன்றவர்கள் வீர மரண மடைந்த மண், அதனை பார்க்க நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார்.