tamilnadu

img

எஸ்.கே.பி. கல்லூரியில்  ‘நான் முதல்வன்’திட்ட வகுப்புகள்

எஸ்.கே.பி. கல்லூரியில்  ‘நான் முதல்வன்’திட்ட வகுப்புகள்

திருவண்ணாமலை, செப்.19- திருவண்ணாமலை எஸ்.கே.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘நான் முதல்வன்’வகுப்புகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் தலைவர் கு.கருணாநிதி தலைமை வகித்தார். இணைச் செயலாளர் கே.வி.அரங்கசாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி ஆர்.சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மூன்றாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் சார்பில் செப். 4 முதல் 17 வரை வகுப்புகள் நடத்திய பயிற்சியாளர் ஆர்த்தி லூக்கா, வேலை வாய்ப்பு தகவல்கள் பற்றி எடுத்துரைத்தார். கல்லூரியின் முதல்வர் எம்.முருகன், கணினித்துறை தலைவரும் நான் முதல்வன் ஒருங்கிணைப்பாளருமான பால்ராஜ் ஆனந்த் மற்றும் ஆங்கிலத்துறை தலைவர் ஞானசேகர், பேராசிரியர்கள், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். பி.ஆர்.ஓ. சையத் ஜகிருத்தீன், சாரணிய பேராசிரியை கோ.இரா.இராம காவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.