குட்கா கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
விழுப்புரம், அக்.16- பெங்களூரிலிருந்து 120 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களைக் காரில் கடத்திவந்த நபரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கடந்த 16.09.2025 அன்று திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருவேல்பட்டுப் பகுதியில் காரில் புகையிலை மற்றும் குட்கா பொருட்களைக் கடத்திவந்த புதுச்சேரி மாநிலம், பாகூர் வட்டம், நிர்ணயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் கதிரவன் (வயது 38) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 120 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் ஆணைக்கிணங்க கதிரவனை 16.10.2025 அன்று திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
உளுந்தூர்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் பறிமுதல்
கள்ளக்குறிச்சி, அக்.16- உளுந்தூர்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸ் சார் சோதனையில் கணக்கில் வராமல் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 40 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்துவதற்கு முன்பாக அலுவலகத்திலிருந்து உளுந்தூர்பேட்டை சார்பதிவாளர் வெளியேறினார். தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் (அக்.15) புதன்கிழமை காலை முதல் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். அதன்படி உளுந்தூர்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு
கடலூர், அக்.16- கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கழு தூர் கிராமத்தில் மக்காச்சோள வயலுக்கு உரம் இடும் கூலி வேலைக்குச் சென்ற கணிதா, பாரிஜாதம், சின்னப்பொண்ணு மற்றும் அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி ஆகிய நான்கு பேர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். வேப்பூர் போலீசார் உடல்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.