tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

சுதந்திர தினத்தையொட்டி ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

காஞ்சிபுரம், ஆக.14- காஞ்சிபுரம் மாவட்ட த்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தையொட்டி வெள்ளியன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த, கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவா தித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, ஜல்ஜீவன் திட்டம் மற்றும் இதர பொருட்கள் தொடர் பாக கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவா திக்கப்படும். பொது மக்கள் பார்வையிட ஏது வாக பிளக்ஸ்பேனர் மூலம் வரவு செலவு கணக்கை வைக்க வேண்டும். இவ்வாறு  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்  செல்வி மோகன் ஓர் அறிக்கையில் தெரி வித்துள்ளார்.

இன்று மெட்ரோ குறைந்த அளவே  இயக்கப்படும்

சென்னை, ஆக. 14– சென்னையில் மெட்ரோ ரயில்கள் வெள்ளி யன்று (ஆக,15),  ஞாயிற்றுக்  கிழமை அட்டவணைப்படி இயக்கப்படுவதாக அறி விக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக் கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும். நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடை வெளியிலும், காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப் படும். மேலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டு ள்ளது.

வடபழனியில் ஸ்கைவாக் - சென்னை  மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சென்ன, ஆக.14- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல்கட்ட திட்டம் மற்றும் இரண்டாவது கட்ட வடபழனி மெட்ரோ நிலையங்களை இணைக்க ஒரு புதிய நடை மேம்பாலத்தை கட்ட ஒப்பந்தம் செய்து உள்ளது.  இந்த ஸ்கைவாக் மூலம் இரண்டு நிலையங்களுக்கு இடையே நேரடி இணைப்பு கிடைக்கும். பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்து வசதி கிடைக்கும். வெறும் ரூ.8.12 கோடி செலவில், 120 நாட்களில் இந்த திட்டம் முடிவடையும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் டி அர்ச்சனன் முன்னிலையில் இதற்கான  ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக அதன் தலைமை பொதுமேலாளர்  எஸ் அசோக் குமார் கையெழுத்திட்டார். ஒப்பந்ததாரர் நிறுவனமான  கவுசிக் நிறுவனத்தின் சார்பில் கே.ஜி மோகன்ராஜ் கையெழுத்திட்டார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.